பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழ் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தனது நற்பெயருக்கு, குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 15 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.