தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டும் - நயினார் நாகேந்திரன் - ganesh chaturthi

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள், மதுக்கடைகள், திரையரங்குகள் செயல்பட்டுவரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க வேண்டும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

nainar-nagendran-urges-to-tn-govt-ganesh-chaturthi-should-be-allowed
விநாயகர் சதுர்த்தியை நடத்த அனுமதிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

By

Published : Sep 4, 2021, 2:17 PM IST

சென்னை:சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (செப்டம்பர் 4) பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, "பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி பேரவையில் பேசும்பொழுது, இந்துக்களின் முழு முதற்கடவுளாக விளங்கும், ஆண்டாண்டு காலமாக வழிபட்டுவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்கள், பொது இடங்களில் நிகழ்வுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகின்றன. அதேபோல், கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவையும் கொண்டாட அனுமதிக்க வேண்டும்" என்றார்.

விநாயகர் சதுர்த்தியை நடத்த அனுமதிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படிதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், "ஆனால், தமிழ்நாட்டில் பள்ளிகள், திரையரங்கம், மதுக்கடைகள் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியையும் அதுபோல கட்டுப்பாடுகளுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்றார்.

இதையும் படிங்க:'ஆன்மீக தொலைக்காட்சிக்கு அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்படவில்லை'

ABOUT THE AUTHOR

...view details