தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தல்: தபால் வாக்குகளில் குளறுபடி; பாக்கியராஜ் குற்றச்சாட்டு!

சென்னை: தபால் ஓட்டுகளில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளதால், அதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என சுவாமி சங்கரதாஸ் அணியின் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

Nadigar sangam

By

Published : Jun 23, 2019, 8:45 PM IST

Updated : Jun 24, 2019, 12:01 AM IST

நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 05.30 மணிக்கு நிறைவுற்றது. இதில் திரை பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பலர் வாக்களித்தனர். விஜய், விக்ரம், பிரசன்னா, சந்தானம், கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர்களும், குஷ்பூ, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம் பெரும் நடிகைகள் பலரும் கலந்துகொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்த பின்னர் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பாக்யராஜ் பேசியதாவது:

தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நல்ல முறையில் நடந்துள்ளது. காவல்துறைக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீதிபதி அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு பிரகாசமான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் எந்த இடத்தில் நடைபெறும் என்பது குழப்பமாக இருந்ததால் தகவல் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். இவையெல்லாம் இல்லாமல் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமாக வாக்களிக்க வந்திருப்பார்கள்.

சுவாமி சங்கரதாஸ் அணி

தபால் ஓட்டுக்களில் நிறைய குளறுபடிகள் வந்தன. நிறைய ஊர்களுக்கு தபால் வாக்குகள் சென்றடையவில்லை. இந்தக் குளறுபடிகள் எல்லாம் எதிரணியினருக்கு சாதகமாக இருந்துள்ளது. தபால் ஓட்டுகள் நேரம் முடிந்தும் விஷால் தரப்பினர் வாக்குச்சாவடிக்கு தபால் ஓட்டுகளை கொண்டு வந்ததை தட்டிக் கேட்டார் ஸ்ரீகாந்த். இதை நாங்கள் நீதிபதியிடம் கூறினோம். தேர்தல் முடிந்ததை அடுத்து வாக்குப் பெட்டிகளை இனிமேல் சீல் வைத்து எந்த இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. அநேகமாக சங்கத்திற்கு தான் எடுத்து செல்வார்கள்.

1587 வாக்குகள் பதிவாகின. 350 வாக்குகள் பதிவாகவில்லை. தபால் வாக்குகளில் நிறைய குளறுபடி ஏற்பட்டுள்ளன. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அவர் தெரிவித்தார்.

Last Updated : Jun 24, 2019, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details