தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்! - naam thamizhar seeman on irattai malai srinivasan

சென்னை: இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், தமிழன் குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

seeman

By

Published : Sep 18, 2019, 7:40 PM IST

இரட்டை மலை சீனிவாசனின் 74ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று சென்னை கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அவரின் மணிமண்டபத்தில் இருக்கும் அவருடைய உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு போராடியவர்களை எங்கள் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம். ஆனால் சிங்காரவேலர், ஜீவானந்தம், நல்லக்கண்ணு, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் போன்றோர்களைத்தான் எங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வோம். சாதி ஒழிப்பு என்றாலே பெரியாரை பற்றித்தான் பேசுககின்றனர். அதற்கு முன் ஏன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சாதி ஒழிப்பை வலியுறுத்தவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "புரட்சியாளர் அம்பேத்கருக்கு அதிகமாகச் சிலை வைத்திருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் என் தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு இந்த ஒரு மணிமண்டபம்தான் உள்ளது. அதேபோல் அயோத்திதாச பண்டிதருக்கு எங்கு சிலை இருக்கிறது என்று பெரும்பாலோருக்கு தெரியாது. திட்டமிட்டு வேண்டுமென்றே தமிழரின் அடையாளம் மறைக்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.

பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்

தொடர்ந்து பேசிய அவர், "தமிழன் நன்றி மறந்தவன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது சரி என்றுதான் பார்க்கிறேன். எல்லோருக்கும் தேங்க்ஸ் என்றுதான் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!

ABOUT THE AUTHOR

...view details