தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நாதக முறையீடு! - நாம் தமிழர் கட்சி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

che
che

By

Published : Feb 23, 2023, 8:32 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று(பிப்.22) நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதே பகுதிக்கு திமுகவினரும் வந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து, கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 12 பேர், திமுகவினர் 4 பேர் மற்றும் 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆகியோர் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரதச் சக்கரவர்த்தி அமர்வில் முறையிட்டனர்.

அப்போது, தங்களை பிரசாரம் செய்ய அனுமதிப்பதில்லை எனவும், தாக்குதல் சம்பந்தமாக போலீசிலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தங்கள் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் முறையிட்டனர்.

இதேபோல சுயேச்சை வேட்பாளர் கண்ணன் சார்பில் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் முறையிட்டார்.

இரு முறையீடுகளையும் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை (பிப்.24) விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஒதுக்கிய ரூ.3,000 கோடி என்ன ஆனது?: அரசுக்கு அண்ணாமலை கேள்வி

ABOUT THE AUTHOR

...view details