சென்னை:புளியந்தோப்பில் தரமற்ற முறையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய முன்னாள் அதிமுக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கட்டடங்களைக் கட்டிக் கொடுத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல், தினசரி பயந்து இருக்குமளவிற்கு வைத்திருக்கிறது, அதிமுக அரசு.
ஓ.பி.எஸ் கைது செய்யபட வேண்டும்
அதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கைது செய்ய வேண்டுமென்றும், அந்த ஒப்பந்ததாரர்களின் பணியை ரத்து செய்து புதிய ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டுமென்றும் முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஐய்யனார் கூறியதாவது, 'சென்னை புளியந்தோப்பில் தரமற்ற வீடுகளை கட்டிய ஒப்பந்தாரர்களைக் கைது செய்ய வேண்டும். ஓ.பி.எஸ் கைது செய்யப்பட வேண்டும்.
ஐஐடி உடனே இந்த அடுக்குமாடி கட்டடங்களை ஆய்வு செய்ய வேண்டும். காப்பீட்டுத் தொகையை தலா 5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். எந்த நேரம் வேண்டுமானலும் இந்த கட்டடம் இடிந்து விழ வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதி வாழ் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு படையை 24 மணி நேரமும் கட்டடத்தின் அருகில் நிற்க வைக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மணிப்பூர் ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள இல. கணேசனுக்கு தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து