தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தல்... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

naam-tamilar-katchi-announced-by-election-candidates

By

Published : Sep 25, 2019, 8:06 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்துவரும் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியின் காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களம் காண்கின்றன.

இந்த மூன்று தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக-திமுக ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

சீமான் - தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இதனிடையே நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் கு. கந்தசாமி, நாங்குநேரி தொகுதியில் ராஜநாராயணன் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பிரவினா மதியழகன் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details