சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் நீண்டநேரமாக பை ஒன்று தனியாகக் கிடந்தது. ரோந்தில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்தப் பை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பைக்கு யாரும் உரிமை கோரவில்லை.
இதனால், அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து உடனே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. சோதனைச் செய்ததில் அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது.