தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்தவர் கைது! - airport lane

சென்னை: விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த நபரை சிஎஸ்எப் அலுவலர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த நபர் கைது!
விமான நிலைய ஓடு பாதையில் சுற்றி திரிந்த நபர் கைது!

By

Published : Jan 4, 2021, 6:11 AM IST

சென்னை பழைய விமான நிலையத்தில் விஐபி, விவிஐபி மட்டும் செல்ல கூடிய வழியில் விமான நிலையத்துக்குள் சென்று விமான ஒடு பாதையில் ஒருவர் சுற்றி திரிந்துகொண்டிருந்தார்.

அதைப் பார்த்த சிஎஸ்எப் அலுவலர்கள் அவரை விசாரணை செய்ய அழைத்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கி முனையில் சிஎஸ்எப் அலுவலர்கள் அவரை கைது செய்தனர்.

அப்போது, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், விஐபிகள் வருகை பகுதியான கேட் நம்பர் 6 வழியாக உள்ளே நுழைந்தததும். அவர் செஞ்சியை சேர்ந்த சிவகுமார் (31) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் தீவிர விசாரணை செய்ய சென்னை விமான நிலைய காவல்துறையினரிடம் அந்த நபரை சி.எஸ்.எப் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தகன மைதானத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details