சென்னை: கிண்டி ராஜ்பவன் மாளிகையில் முக்கிய விருந்தினர்கள் தங்கும் இல்லம் அருகே நேற்று (டிச.17) மாலை எரிந்த நிலையில் ஒரு மர்ம பொருள் கிடந்தது. இதனைக் கண்ட பாதுகாப்பு ரோந்து காவலர்கள் வெடிகுண்டாக இருக்குமோ என பயந்து உடனடியாக சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த போலீசார் அந்த மர்ம பொருளை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது. விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பறக்கவிடப்பட்ட பலூன் காற்றின் வேகம் குறைந்ததால் மைதானத்தில் விழுந்தது தெரியவந்தது.