தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள்

பூந்தமல்லி அருகே மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் நகை, பணம் விலை உயர்ந்த 5 செல்போன்களை பறித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய மர்ம நபர்கள்
மசாஜ் சென்டரில் புகுந்து கத்தி முனையில் திருடிய மர்ம நபர்கள்

By

Published : Jan 31, 2023, 9:01 AM IST

Updated : Jan 31, 2023, 12:52 PM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு மேனேஜராக பணிபுரிந்து வருபவர் குமார். இந்த மசாஜ் சென்டருக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

பின்னர் மேனேஜரிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் இருந்து 3 செல்போன்கள், 20 ஆயிரம் பணம் மற்றும் அங்கு வந்த வாடிக்கையாளர்களின் விலை உயர்ந்த 2 செல்போன்கள் என பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் மசாஜ் சென்டரில் வாடிக்கையாளர்கள் போல் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் செல்போன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பக்கிங்காம் கால்வாய் புனரமைப்பு தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

Last Updated : Jan 31, 2023, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details