தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என் மகளுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது' எனக்கூறி ரூ.18 லட்சம் வரை பணமோசடி செய்த பெண் கைது! - நம்ப வைத்து மோசடி செய்தல்

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 4, 2023, 9:45 PM IST

சென்னை: குரோம்பேட்டை, நாகல்கேணி பகுதியைச் சேர்ந்தவர், மலர்(43). இவர் காலணி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தபோது குணசுந்தரி என்பவரும் அவருடன் பணிபுரிந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் குணசுந்தரி தன்னுடைய மகள் சுகன்யா(28), அரசியல் பிரமுகர்களிடம் செல்வாக்குடன் உள்ளார். அதனால் நீங்கள் பணம் கொடுத்தால் உங்கள் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக மலரிடம் ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

அவரும் அரசு வேலை கிடைத்துவிடும் என நம்பி 5 லட்சம் ரூபாயை பல தவணைகளாக சுகன்யாவிடம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் குணசுந்தரியும்; அவரது மகள் சுகன்யாவும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மலர் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை: விசாரணையைத் துவக்கிய கோட்டாட்சியர்!

புகாரின்பேரில் குரோம்பேட்டை காவல் துறையினர் நம்ப வைத்து மோசடி செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த சுகன்யாவை கைது செய்தனர். விசாரணையில் அப்பெண் பல பேரிடம் தான் ஆளும் கட்சியில் முக்கியப்பிரமுகர் ஒருவரின் உதவியாளராக இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெட்ஷீட் விற்பதுபோல் நோட்டமிட்டு திருடும் ஈரானிய கொள்ளையர்கள் கைது... போலீசாரிடம் ஒரு கோடி ரூபாய் பேரம்!

ABOUT THE AUTHOR

...view details