சென்னையில் 'மை க்யூட் மினி' என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் கைகளால் செய்யப்பட்டவை ஆகும். இதில் கைவினைப் பொருள்களாக மிகச் சிறிய அளவிலான பொம்மைகளும் செய்யப்படுகின்றன.
இதன் இணை நிறுவனர் எஸ்.சி. சரண் இது குறித்து கூறுகையில், 2014ஆம் ஆண்டு ஜூலையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது எனவும், இது பொழுதுபோக்கிற்காக முதலில் ஆரம்பிக்கப்பட்டது எனவும், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு விற்பனையை தொடங்கியதாகவும் அவர் கூறினார்.