தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எனது நடவடிக்கைகள் மட்டுமே பேசும்' - புதிய டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை - சைலேந்திர பாபு

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்றபின், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

sylendrababu
sylendrababu

By

Published : Jun 30, 2021, 2:24 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி வந்த ஜே.கே. திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், புதிய தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 30) டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது.

30ஆவது டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திர பாபு:
அப்போது முன்னாள் டிஜிபி திரிபாதி முக்கியக்கோப்புகளை புதியதாக பொறுப்பெற்றுக்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஒப்படைத்து மலர்க்கொத்து கொடுத்தார்.

பின்னர் கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் 30ஆவது சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பெற்றுக்கொண்டார். முன்னதாக இன்றுடன் பதவிக்காலம் முடிவடைந்த முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டு, ஐபிஎஸ் அலுவலர்கள் வழியனுப்பு மரியாதை செலுத்தினர்.

'காவலர்கள் மனிதாபிமானத்துடன் மக்களிடம் நடக்கவேண்டும்'
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, 'தமிழ்நாடு காவல் துறையினுடைய தலைமைப் பொறுப்பில் பணியாற்றுவது அரிய சந்தர்ப்பம். டிஜிபியாக பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட மனுக்கள் 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

'எனது நடவடிக்கைகள் மட்டுமே பேசும்' - புதிய டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

காவலர்கள் மனிதாபிமானத்துடன் பொதுமக்களிடம் நடந்து கொள்ளவேண்டும். மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
காலப்போக்கில் எனது நடவடிக்கைகள், செயல்பாடுகள் மட்டுமே பேசும்' இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்பு

ABOUT THE AUTHOR

...view details