தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழியாறு ஆற்றில் தடுப்பணை: முதலமைச்சர் தகவல் - CM

சென்னை: ஆழியாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆழியாறு ஆற்றில் தடுப்பணை : சட்ட பேரவையில் முதல்வரின் பேச்சு

By

Published : Jul 18, 2019, 10:22 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த விவாதத்தின் போது, ஆழியாறு ஆற்றில் கூடுதல் தடுப்பணை கட்டுவது தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில் அறிக்கையில், பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு போன்ற சட்டப்பேரவை தொகுதிகளில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக பெய்யும் மழைநீர் வீணாக கடலில் கலக்குவதை தடுக்கும் வகையில், கூடுதல் தடுப்பு அணைகள் கட்டுவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆழியாறு ஆற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் பெற்றப்பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details