தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை குறுகிய காலத்தில் குறைத்தது திமுக: முத்தரசன் - முத்தரசன்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் கரோனாவை குறைத்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

கரோனாவை குறுகிய காலத்தில் குறைத்தது திமுக
கரோனாவை குறுகிய காலத்தில் குறைத்தது திமுக

By

Published : Jun 20, 2021, 4:05 PM IST

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் AIYF அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பாக, தடுப்பூசி விழிப்புணர்வு பரப்புரைப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்று பரப்புரைப் பாடலை வெளியிட்டார்.

பின் பரப்புரை வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் வீரபாண்டியன், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரோனாவை குறுகிய காலத்தில் குறைத்தது திமுக

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பாடலை தொடங்கி வைத்தேன். இந்தப் பாடலை எழுதிய எழுத்தாளர் அறந்தை பாபுக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.

கரோனாவின் இரண்டாவது அலையை திமுக ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே குறைத்துள்ளது. முதலமைச்சர் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

மூன்றாவது அலையைத் தடுக்க அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு கட்டாயமாக ரத்து செய்யப்படும். முதலமைச்சரும் பிரதமரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: திருமணம் ஆன மூன்றே நாள்களில் சாணி பவுடர் குடித்து பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details