சென்னையில் சமூக விரோத கும்பல் குடியிருப்புகளில் வாடகை வீடு எடுத்து தங்கி சுற்றியுள்ள மக்கள், வங்கி, வணிக வளாகங்கள் குறித்து தகவல்களை சேகரித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உளவுப் பிரிவு தகவலின் அடிப்படையில் தேச விரோத கும்பல் ஒன்று சென்னையில் சதிவேலையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
'சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை சமர்பிக்க வேண்டும்' - ஏ.கே.விஸ்வநாதன் - சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு
06:45 July 02
சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்களை 60 நாள்களுக்குள் வீட்டின் உரிமையாளர்கள் சமர்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் நேற்று (ஜூலை 1) உத்தரவிட்டார்.
அதனை தடுக்கும் விதமாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 அடிப்படையில் சென்னையில் வீட்டு வாடகைக்கு இருப்பவர்களின் விவரத்தை வீட்டின் உரிமையாளர்கள் ஜூலை 1 முதல் 60 நாள்களுக்குள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அந்த உத்தரவை அனைத்து துணை காவல் ஆணையர்கள், உதவி காவல் ஆணையர்கள், அனைத்து காவல் நிலயங்களில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்த வேண்டும். மேலும் உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு 188 IPC சட்டப்படி 6 மாத சிறை, 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்று ஏ.கே. விஸ்வநாதனுக்கு பதில் மகேஷ் குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையர் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்: சென்னை காவல் ஆணையாளர்