தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் மோடி' - இஸ்லாமிய அமைப்பினர் கண்டனம் - குடியுரிமை திருத்த சட்டம்

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் பேசிய இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன், மோடி மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குகிறார் எனக் காட்டம் தெரிவித்துள்ளார்.

Muslims association protest against cab
இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம்

By

Published : Dec 22, 2019, 7:56 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் திருவல்லிக்கேணி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜா முகைதீன் கூறுகையில்;

' அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் நமது நாட்டில் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் நோக்கத்துடன் மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்நாட்டின் பூர்வகுடிகள் என்பதை மறைத்து வெளிநாட்டவர் என முத்திரைக் குத்தி, நாட்டை விட்டு வெளியேற்றி என்.ஆர்.சி முகாம்களில் அடைக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம்

மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து பிற மதத்தினரும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தை முறியடிக்க, நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும், பூர்வ குடிகளான இலங்கைத் தமிழர்களுக்கும் எதிராக இந்தச் சட்டம் அமைந்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக 5,000 பேர் திரண்டு போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details