தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து மசூதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்படும் - வாக்குறுதி நல்கிய முதலமைச்சர்! - முஸ்லிம் அமைப்புகளுக்கு முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்

சென்னை: அயோத்தி வழக்குத் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் அனைத்து மசூதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்படும் என இஸ்லாமிய அமைப்புகளுக்கு முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த முஸ்லிம் அமைப்புகள்

By

Published : Nov 8, 2019, 4:19 PM IST

அயோத்தி வழக்குத் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அமைதியை நிலைநாட்டக் கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்புகள் சார்பில் நிர்வாகிகள் முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் நிர்வாகிகள்; 'அயோத்தி வழக்குத் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அது சாதகமாக வந்தாலும் சரி, பாதகமாக வந்தாலும் சரி.

செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்லாமிய அமைப்புகள்

கண்டிப்பாக மத நல்லிணக்கத்திற்கும் சமுதாயத்திற்கும் தேவையானதைச் செய்வோம். முதலமைச்சர் எங்களது கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார். எல்லா சமுதாயத்துக்கும் இந்த அரசு நல்லதையே செய்யும். இது குறித்து அனைத்து மசூதிகளிலும் பாதுகாப்புத் தரப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளதாக’ தெரிவித்தனர்.

இதையும் படிங்க : அயோத்தி தீர்ப்பு எதிரொலி: சந்தேகத்திற்கிடமான நபர்களுக்கு விடுதியில் அறை வழங்க கூடாது

ABOUT THE AUTHOR

...view details