சென்னை: பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமூகத்துடனான தொடர்புகளை ஊக்குவிக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.
சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் “அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் 6 ஆம் தேதி திறந்து வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காண அன்றாட வாழ்க்கை, வேலை மற்றும் அவர்களின் பொழுதுபோக்கு ஆகியற்றை மேற்கொள்ளும் வகையில், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சியகப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை கடந்து தீர்வுகளைக் காணவும் இந்த அருங்காட்சியகம் வழிவகை செய்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய “மாதிரி இல்லம்” வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மேலும், இந்த அருங்காட்சியகமானது பயனாளிகள், படைப்பாளிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் சமூகத்துடனான தொடர்புகளை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 21 வகையான மாற்றுத்திறன் கொண்ட நபர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், ஒன்றுகூடி வாழவும், தொழில்நுட்பத் தகவல்கள் மற்றும் உதவி உபகரணங்களை உபயோகப்படுத்த பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதலையும் பெற இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.
வாழ்வாதாரத்திற்கான பொருட்கள்: இதுகுறித்து நம்மிடம் பேசிய காபா நாசியா உமர் (ஸ்பீச் தேரபிஸ்ட்), இந்த அருங்காட்சியகமானது மாற்று திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், Live, play, Work மாற்றுத்திறனாளிகள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளின் தடைகளை எவ்வாறு கடந்து அவர்களுக்கு உதவி புரியும் வகையிலான பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்கள் குறைந்த விலையில் இருந்து அதிக விலைக்கும் பொருட்கள் கிடைக்கின்றன. இங்கு வரும் மாற்று திறனாளிகளுக்கு பொருட்களை விற்பனை செய்வதற்காக இல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, பொருட்கள் மூலம் அவர்களுடைய தடைகளை தாண்டி வாழ்க்கை வாழ்வதற்கான வழிவகை செய்யப்படுகிறது.
பார்வையற்றோருக்கான கண்ணாடி:மேலும் இங்கு உள்ள பொருள்கள் குறித்து உரிய விளக்கங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம். மாற்று திறனாளிகள் அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்யும் வகையில் உதவி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையற்றோருக்கான தொட்டு உணர்வு மூலம் விளையாடக்கூடிய விளையாட்டுக்கள், பிரெயில் முறையில் அனேக விளையாட்டுகள் உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மேலும் இங்கு screen read, read please போன்ற சாப்ட்வேர் மூலம் பார்வையற்ற திறனாளிகள் படிக்க முடியும். பார்வையற்றோருக்கான கண்ணாடி இங்கு சிறப்பு கவனம் பெறுகிறது. இந்த கண்ணாடி மூலம் பார்வையற்றவர்கள், மற்ற நபர்கள் போல இயல்பாக தடையின்றி நடக்க முடியும். மாற்று திறனாளிகள் ஓவியம் வரைவதற்கான பிரஷ்கள், இசைக்கருவிகள், ஜாமென்ட்ரி பாக்ஸ், கணினிகள், மேலும் தொட்டு உணர்வு மூலம் பொருள்களின் வடிவத்தையும் கண்டறிவது, இன்டோர் கேம், உள்ளிட்டவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்டிசம் பாதித்த நபர்கள் ஒரு சில செயலை திரும்பத் திரும்ப செய்வார்கள், அப்படி அவர்கள் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு நூல் நெய்தல் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது எண்ணங்கள் ஒரு நிலை பெற்று மாற்றம் அடைகின்றனர். அலெக்சா என்ற மென்பொருள் சமையலறை, படுக்கை அறை, கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாற்றுத்திறனாளிகள் ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து மின்சாதன பொருட்களை கட்டுப்படுத்த முடியும், என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மாதிரி இல்லம்:மேலும் நம்மிடம் பேசிய பிசியோதெரபிஸ்ட்டான பபிதா, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்றவாறு இங்கு சமையலறை, படுக்கை அறை, கழிவறை, தரைத்தளம், ஸ்சுவிட்ச் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளது. வெஜிடபிள் கட்டர், மிக்ஸி, நியூஸ் பேப்பர் ரீடிங், கிச்சனில் பல்வேறு விதமான மாற்று திறனாளிகள் பயன்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறையில் ஸ்லைடிங் டோர், அதிக உயரமில்லாத படுக்கை, மிகப்பெரிய கண்ணாடி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கைகளால் இயக்கப்படும் சக்கர நாற்காலி, மின்மோட்டார் மூலம் இயங்கும் சக்கர நாற்காலி, உயர்ந்து நிற்கும் சக்கர நாற்காலி, 180 டிகிரி சக்கர நாற்காலி, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மேலும் ஒரு சில மாற்றுத்திறனாளிகள் அழைத்துவர இந்த வகையான சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறோம். மாற்று திறனாளிகள் தொட்டு உணர தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் உள்ள உணவகத்தில் மாற்று திறனாளிகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயமாக அவர்கள் சம்பாதிக்கும் அளவிற்கும், ஒரு உணவகத்தை நிர்வாகிக்கும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் தன்னம்பிக்கை பெற்று வாழ்கையில் முன்னேற வழிவகை ஏற்படுகிறது, என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு: இதுகுறித்து நம்மிடம் பேசிய வேதவல்லி (டிசைனர்), ஒருங்கிணைந்த சமுதாயம் என்பதில் அனைத்து தரப்பு மக்களும் வாழ்கின்றனர். மாற்று திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்றவாறு இந்த அருங்காட்சியகம் உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள உபகரணங்கள் குறித்து சைகை மொழி, எழுத்துக்கள், ஒலி ஆகியவை மூலம் விளக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் எந்த ஒரு தனிநபரும், ஒரு பள்ளி மாணவன், கல்லூரி மாணவன், இப்படியாக யாராக இருந்தாலும், அவர்களுடைய சிந்தனை மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களில் வடிவத்தில், எளிமையும், மாற்றத்தையும் ஏற்படுத்துமானால், அவர்களுடைய சிந்தனை இங்கே வரவேற்கப்படுகிறது. மேலும், எல்லா தரப்பிலும், எல்லா வேலை வாய்ப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது குறித்து இங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்கள் விற்பனை: இந்த கண்காட்சியில் மற்றொரு சிறப்பம்சமாக மாற்றுத்திறனாளிகள் வரைந்த ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அவர்களது வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் உருவாக்கிய கைவினைப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகள் எந்தவித தடையுமின்றி வாழும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகமாக உள்ளது. மேலும் இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, அனைத்து தரப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. அனைவருக்கும், அனைத்தும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது, என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் இந்த அருங்காட்சியகம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் இங்கே மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்படும் உணவுகள் விற்பனை செய்வதற்கான உணவகம் இங்கே செயல்பட்டு வருகிறது. https://tnmop.in/ என்ற இணையதளத்திலும், museumofpossibilities@gmail.com என்ற இணையதள முகவரியிலும், இது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் தேர்தல்: சரத் பவார் மறுப்பு - பொது வேட்பாளர் யார்?