தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - கொலை வழக்கில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு

சென்னையில் தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

murder
murder

By

Published : Dec 16, 2022, 8:50 PM IST

சென்னை: நொச்சிக்குப்பம் பகுதியில் தாயம் விளையாடிய போது, ஆனந்தன் என்பவரை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார். இதையடுத்து, சில நாட்கள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த தனசேகரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆனந்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மார்பின் இடது பக்கத்தில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தனசேகர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதித்து குற்றவாளி ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இன்று (டிச.12) சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றவாளி ஆனந்தனுக்கு எதிரான அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஆனந்தன் மீதான குற்றம் நிரூபணமானதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சிகரெட் மற்றும் புகையிலைப்பொருட்கள் குறித்த புகார்களுக்கு டோல் ஃபிரீ எண்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details