சென்னை கொரட்டூர் ரயில் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது கொரட்டூரிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் செல்லும் நடைமேடையில் திடீரென கூட்டத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் அங்கிருந்த இளைஞர் ஒருவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர்.
பின்னர் இரண்டு இளைஞனர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். வெட்டு காயம் பட்டவரை அங்கிருந்தவர்கள் தூக்க சென்றபோது அவரும் வெட்டு காயத்துடன் தப்பி ஓடிவிட்டார்.
கொரட்டூர் ரயில்நிலைய நடைமேடை. இந்த சம்பவத்தால் ரயில் நிலையம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து கொரட்டூர் காவல் துறை மற்றும் பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையாகியுள்ளது. இதனால் கொரட்டூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவமும் கல்லூரி மாணவர்கள் மோதலாக இருக்குமோ என காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர்.
இதையும் படிக்க: மாட்டுச் சாணத்தில் அழகு சாதனப் பொருள்கள்: அசத்தும் பட்டதாரி இளைஞர்!