காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 32). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தன் மனைவி, இரு பிள்ளைகளுடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் புகை பிடிப்பதற்காக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை அருகேயுள்ள செங்கல் சூளை வரை சென்றபோது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கும் ரஞ்சித்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதையடுத்து அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சித்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைக் கண்டதும் உடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்று அவரது உறவினர்களிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார்.
தகவலை கேள்விப்பட்டு உறவினர்கள் அங்கு வருவதற்குள் ரஞ்சித்குமார் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்ததும் உதவி காவல் ஆணையர் சம்பத் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாங்காட்டில் பயங்கரம்: இளைஞர் கொலை இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த விமல், அபி, பிரேம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விமல் என்பவரின் தாயுடன் ரஞ்சித்குமார் திருமணம் மீறிய உறவில் இருந்ததால், கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடுமையான ஊரடங்கின் மத்தியில் கொலை - 3 பேர் கைது! இதையும் படிங்க:பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!