தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பனை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் சிறையில் அடைப்பு - murder accused arrested in chennai

சென்னை: திருவொற்றியூரில் நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நண்பனை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் சிறையில் அடைப்பு
நண்பனை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் சிறையில் அடைப்பு

By

Published : Oct 1, 2020, 1:53 PM IST

சென்னை திருவொற்றியூரில் செப்டம்பர் 16 ஆம் தேதி சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார்த்தி என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த தனிப்படை காவல் துறையினர் காதர் மீரான், சரவணன் ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகளின் செல்போன் சிக்னல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டவே, தனிப்படையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் குற்றவாளிகளின் இருப்பிடத்தை அடைந்த தனிப்படையினர், பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கேட் கார்த்திக், மண்டை கணேஷ், சுஜித் ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கணவருடன் தகராறு - பெண் மாயம்

ABOUT THE AUTHOR

...view details