தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நங்கநல்லூரில் துணியால் முகத்தை மூடி வந்தவர்களுக்கு அபராதம்

சென்னை: நங்கநல்லூரில் துணியால் முகத்தை மூடி வந்தவர்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் ரூ.100 அபராதம் விதித்து முகக்கவசங்களை வழங்கினர்.

நங்கநல்லூரில் துணியால் முகத்தை கட்டி வந்தவர்களுக்கு அபாராதம்
நங்கநல்லூரில் துணியால் முகத்தை கட்டி வந்தவர்களுக்கு அபாராதம்

By

Published : Apr 24, 2020, 4:54 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில்தான் கரோனாவால்அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் 400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும், இல்லையென்றால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணிவது குறித்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், நங்கநல்லூர் மார்கெட் பகுதியில், மண்டல செயற்பொறியாளர் ஹர்டின் ரோசையா தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் கரோனா ஆட்டோ மூலமாக பொது மக்களிடத்தில் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

நங்கநல்லூரில் துணியால் முகத்தை கட்டி வந்தவர்களுக்கு அபாராதம்

அப்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு நடந்து வந்தவர்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து முகக்கவசங்களை வழங்கினர். அதேசமயம் கைக்குட்டையில் முகத்தை மூடிச் சென்றவர்களிடம் முகக்கவசத்தைதான் அணிய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க:அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல்

ABOUT THE AUTHOR

...view details