தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு - சென்னை மாநகராட்சி சுற்றுத்திரியும் மாடுகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடு உரிமையாளருக்கு அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு - மாநகராட்சி
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடு உரிமையாளருக்கு அபராதம் இரட்டிப்பாக அதிகரிப்பு - மாநகராட்சி

By

Published : Sep 29, 2022, 6:51 PM IST

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அவ்வாறு தெருக்களில் சுற்றித்திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1250 விதிக்கப்பட்டு வந்தது. அத்துடன் ரூ.300 பராமரிப்பு பணிகளுக்கு என மொத்தமாக ரூ.1,550 விதிக்கப்பட்டுவந்தது.

2021ஆம் ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30 ஆம் தேதி வரை மொத்தமாக 4,099 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.61 லட்சத்து 63 ஆயிரத்து 750 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அபராதமானது ரூ.1,550 முதல் ரூ.3,000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது.

இனி வரும் காலங்களில் மாடு பிடிபட்டால் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும். அதே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் 97 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ABOUT THE AUTHOR

...view details