சென்னை: சட்டப்பேரவை இன்று (மே.5) கூடியதும் முதலில் வினாக்கள் விடைகள் நேரம் (கேள்வி பதில் நேரம்) நடைபெற்றது. அப்போது, உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது, எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் பணிகளில் சில காலம் தொய்வு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
10 நகரங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் : அமைச்சர் கே.என்.நேரு மேலும், தற்போது ஒவ்வொரு நகரமாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு வருவதாகவும், மதுரை உள்பட 10 நகரங்களிலும் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: எம்எல்ஏ-க்களே, கேள்விகளை பட்டு பட்டுனு அடிங்க... - கிளாஸ் எடுத்த துரைமுருகன்...