தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Rains: மின் மோட்டார் பழுதால் தேங்கிய மழைநீர்.. சீரமைக்கும் பணிகள் மும்முரம்! - மழைநீர் வடிகால் செய்யும் பணிகள்

சென்னையில் நேற்று நள்ளிரவில் இருந்து பெய்த மழையினால் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.

வரலாறு காணாத மழையால் சாலைகள் மற்றும் சுரங்க பாதைகளில் மழைநீர் தேக்கம்.
வரலாறு காணாத மழையால் சாலைகள் மற்றும் சுரங்க பாதைகளில் மழைநீர் தேக்கம்.

By

Published : Jun 19, 2023, 10:26 PM IST

சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர்

சென்னை:சென்னையில் நேற்று நள்ளிரவிலிருந்து பெய்த மழையினால் பெரும்பாலான தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்று பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீரை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் காலை முதலே மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுரங்கப் பாதைகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்த கூறியதாவது,“சென்னை நகரத்தில் உள்ள அனைத்து சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆலந்தூர் கத்திப்பாரா பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் வைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் பழுதான காரணத்தினால் தண்ணீர் தேங்கியது. மேலும் இந்த நிலை மாற்று ஏற்பாடுகளுடன் சரி செய்யப்பட்டு தற்பொழுது தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் சுரங்கப்பாதை இயல்பு நிலைக்குத் திரும்பும்.

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் சாலை சீரமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்படும். இதனைத் தொடர்ந்து சென்னையில் 10.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சில இடங்களில் 14, 15 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆலந்தூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகமாக மழை பெய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மழையினால் பெரிய அளவில் பிரச்சனை இல்லை. சில இடங்களில் தண்ணீர் இருக்கக்கூடிய நிலை வந்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு மையத்திற்குப் புகார்கள் வந்தவுடன், அதனைச் சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் விரைந்து ஈடுபடுகின்றனர். நேற்று இரவு முதல் சுமார் 25 இடங்களில் பம்பு மூலம் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 22 சுரங்கப்பாதை உள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர்த்து மற்ற அனைத்து சுரங்கப்பாதைகளும் சரியாக உள்ளது. அயனாவரம் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருந்து வருகிறது. அங்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதால் மழை நீர் தேங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதையும் விரைவில் முடிக்க உள்ளோம்” மழைநீர் அகற்ற மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,“வரக்கூடிய பருவ மழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்னால் முடிக்கப்படும்” என சிவதாஸ் மீனா தெரிவித்தார்.

முன்னதாக கிண்டி நகர்ப்புற சதுக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்ற வைக்கப்பட்டுள்ள 2 மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டதால் அங்கு மழைநீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டது எனக் கூறிய அவர் “நான் நேரடியாக அங்குச் சென்று ஆய்வு செய்தேன் தற்போது, வேறொரு மோட்டார் மாற்றப்பட்டு தற்போது மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, இன்று இரவுக்குள் முழுமையாக மழை நீர் அகற்றப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Chennai Rain Effects: சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details