தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கடும் பனிமூட்டத்தால் பெங்களூருக்கு திரும்பிய மும்பை விமானம் - சென்னை வந்த இரண்டு விமானங்கள்

சென்னையில் இன்று(டிச.31) ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக மும்பை விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

Etv Bharatசென்னையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால்  பெங்களூருக்கு திரும்பிய மும்பை விமானம்
Etv Bharatசென்னையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் பெங்களூருக்கு திரும்பிய மும்பை விமானம்

By

Published : Dec 31, 2022, 11:52 AM IST

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று (டிச.31) ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திரும்பி சென்றது. அதோடு14 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தாமதமாக கிளம்பின. சென்னை புறநகர் பகுதியில் இன்று (டிச.31) காலை முதல் பனி மூட்டம் இருந்தது. சென்னை இதனால் விமான சேவைகள் சிறிதளவு பாதிக்கப்பட்டன. மும்பையில் இருந்து 129 பயணிகளுடன் இன்று (டிச.31) காலை 7:45 மணிக்கு சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெளிவாகத் தெரியாததால், அந்த விமானம் சிறிது நேரம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது. அதன் பின்பு பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

14 வருகை புறப்பாடு விமானங்கள் தாமதம்

அதைப்போல மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூருல் இருந்து சென்னை வந்த இரண்டு விமானங்கள், பெங்களூரு, கொல்கத்தா, கோவை, ஹைதராபாத் உள்லிட்ட ஏழு விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கின. அதோடு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான மஸ்கட், லண்டன், கோலாலம்பூர், செயின் டென்னிஸ், கொல்கத்தா, புனே, பெங்களூரு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதையும் படிங்க:வாகனவோட்டிகள் கவனம்: 2 பைக்குகளுக்கு மேல் வரிசையாக செல்லக்கூடாது

ABOUT THE AUTHOR

...view details