தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Airport: அதிநவீன 6 அடுக்கு கார் பார்க்கிங் டிச.4ஆம் தேதி திறப்பு! - Airport news

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், டிசம்பர் 4ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Airport: அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் டிச.4ஆம் தேதி திறப்பு!
Chennai Airport: அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் டிச.4ஆம் தேதி திறப்பு!

By

Published : Nov 30, 2022, 11:08 AM IST

சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில், புதிதாக ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மின்சார வாகனங்களை இங்கு நிறுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கார் பார்க்கிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அதில் இருக்கும் பல்வேறு நிர்வாக காரணங்களால், கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை 00.01 மணியில் இருந்து இந்த கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய அதிநவீன கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வருவதை ஒட்டி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் தரைதள பழைய கார் பார்க்கிங் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் மூடப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆறடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதன் பின்பு பழைய கார் பார்க்கிங்கில் கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இந்த மல்டி லெவல் ஆறடுக்கு புதிய கார் பார்க்கிங்கில்தான், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய கார் பார்க்கிங்கில் கட்டண விகிதங்களையும் அறிவித்துள்ளனர். இது பயணிகளையும், வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்கள்: ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள், முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு ரூ.20, அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ. 25 என வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போதைய புதிய மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய்தான். ஆனால் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.30. அதேபோல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் ரூ.90.

கார்: கார்களுக்கு 30 நிமிடத்திற்கு தற்போது 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் புதிய கார் பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ.75. ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.100. இனி புதிய கார் பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு ரூ.150. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் ரூ.500 ஆக வசூலிக்கப்பட உள்ளது.

வேன், டெம்போ: வேன், டெம்போக்களுக்கு தற்போதைய பார்க்கிங்கில், 30 நிமிடங்களுக்கு ரூ.40. ஆனால் புதிய பார்க்கிங்கில் 30 நிமிடங்களுக்கு ரூ.300. மேலும் 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்கில், ரூ.110. புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.300. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.1,000.

பஸ், டிரக்: பஸ், டிரக்குகளுக்கு ஏற்கனவே உள்ள பார்க்கிங்கில் 30 நிமிடம் வரை நிறுத்தினால் ரூ.50. தற்போதைய புதிய பார்க்கிங்கில் ரூ.600. பழைய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் ரூ.110. புதிய பார்க்கிங்கில் இரண்டு மணி நேரம் நிறுத்தினால் ரூ.600. மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால், ரூ.2,000 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இது தனி வழி.. சென்னை விமான நிலையத்தில் இனி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது!

ABOUT THE AUTHOR

...view details