சென்னை:வடசென்னை புளியந்தோப்பில், நேற்று (மே 18) அனைத்துலக தமிழர் செயலகம் மற்றும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 'முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்' என்ற இன உணர்வு வணக்கப்பாடலோடு நிகழ்வு தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அனைத்துலக தமிழர் செயலகப் பொறுப்பாளர் தோழர் ஜீவானந்தம் ஆகியோர் இலங்கையில் நடந்தப்பட்ட இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, அவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.
சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இனப்படுகொலையின் சாட்சியமாய் நிற்கும் சிறுவன் பாலச்சந்திரனின் படத்தை கையில் ஏந்திய சிறுவர்கள், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் கே.பி.பார்க் குடியிருப்புப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி உணர்வாளர்களால் பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டது மேலும், இந்த அமைப்புகளின் சார்பில் பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: இலங்கையில் நிலவும் நெருக்கடி குறித்து சர்வேஸ்வரனுடன் ஒரு நேர்காணல்