தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டணியில் இருந்து விலங்குகிறேன்: கருணாஸ் அறிவிப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் அறிவிப்பு
கருணாஸ் அறிவிப்பு

By

Published : Mar 6, 2021, 6:00 PM IST

சென்னை:முக்குலத்தோர் புலிப்படையின் அரசியல் நிலைப்பாடு குறித்து, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கருணாஸ் சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அதிமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைக்கு திருவாடனை தொகுதியை ஒதுக்கி அங்கீகரித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

முக்குலத்தோருக்கான இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தேன். கடந்த 26 ஆண்டுகளாக முக்குலத்தோர் சமுதாயம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முக்குலத்தோர் புலிப்படையின் 12 அம்ச கோரிக்கைகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி அரசு கொங்கு கவுண்டர், வன்னியர் சமூகங்களை கையில் எடுத்துக்கொண்டு முக்குலத்தோர் சமூகத்தை புறம் தள்ளுகிறது. அதனால், அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுகிறது. அதிமுகவில் உள்ள 1.5 கோடி தொண்டர்களில் 75 லட்சம் பேர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதிமுக கூட்டணியில் சீட் கேட்கும் அளவிற்கு முக்குலத்தோர் புலிப்படை மானம்கெட்டுப் போகவில்லை.

சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம், அதிமுகவிற்கு எதிராக வேலை செய்யும்" என்றார்.

இதையும் படிங்க:திமுக ஒதுக்கும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே. பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details