சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையின்போது முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட இரு நாட்களுக்குள் முகிலன் மாயமாகி இருப்பதாகவும், அவரை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.