தமிழ்நாடு

tamil nadu

மாணவன் உயிரிழப்பு - மின்பகிர்மானக் கழகம் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

சென்னை: சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து, சிறுவன் உயிரிழக்கக் காரணமாக இருந்த அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

By

Published : Sep 17, 2019, 11:45 PM IST

Published : Sep 17, 2019, 11:45 PM IST

human rights commission

சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 9ஆம் வகுப்பு மாணவன் தீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

அப்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அலுவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details