சென்னை தாம்பரம் அடையாறு ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் அனைத்தும் ரூ.514 கோடி செலவில் நடைபெற்றுவருகின்றன. இதனை ஊரகத் துறை அமைச்சர் பெஞ்சமின், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
பின்னர் முடிச்சூர் வரதராஜபுரம் அணைக்கட்டு பகுதியில் ரூ.12 கோடி செலவில் அமைக்கப்பட்டுவரும் நீர்த்தேக்கத்தை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வுசெய்தார். மேலும் அடையாறு ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணிகள், சோமங்கலம் நீர்த்தேக்கப் பணிகள் ஆகியவற்றையும் அமைச்சர் ஆய்வுசெய்தார்.
அதன் பின்னர் பெஞ்சமின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அடையாறு ஆற்றில் ரூ.514 கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 60 கோடி ரூபாய் செலவில் ஒரத்தூர் - ஆரப்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் 50 விழுக்காடு முடிவுற்றுள்ளன. இதன்மூலம் 1.35 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படும்.