தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி ஷாப்பிங் செல்ல 50 சிறப்பு பேருந்துகள்! - deepawali

chennai bus
chennai bus

By

Published : Oct 23, 2020, 4:33 PM IST

Updated : Oct 23, 2020, 5:25 PM IST

16:23 October 23

சிறப்பு பேருந்து அட்டவணை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாள்களில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறி்ப்பில், "இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்று பொருள்களை வாங்க அக். 24 முதல் 26ஆம் தேதி வரை, அக். 31 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை மற்றும் நவம்பர் 7ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை, ஏழு நாள்களுக்கு மாநகர் பேக்குவரத்துக் கழகம் சார்பில் 25 வழித்தடங்களில் 50 சிறப்பு பேருந்துகள் அட்டவணையில் உள்ளவாறு இயக்கப்படும். 

பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் "Deepavali Shopping Special" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க:சாலையில் துடிதுடித்த ரியல் எஸ்டேட் அதிபர்; சரமாரியாக வெட்டி படுகொலை!

Last Updated : Oct 23, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details