தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம்பள பிடித்தத்தை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - சம்பள பிடித்தம் எதிர்த்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை: ஊரடங்கு நாள்களில் சம்பளம் பிடிக்கப்பட்டதை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைத்து பணிமனைகளிலும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

MTC employees announce protest
MTC employees announce protest

By

Published : May 31, 2020, 12:03 PM IST

கரோனா ஊரடங்கு காலத்தில் செயல்படாமல் இருந்தாலும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு கூறியுள்ள நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மாதம் முழு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், மே மாதத்திற்காக ஊதியம் வழங்கும்போது கடந்த ஆண்டு சராசரி அடிப்படையில் வருகைப் பதிவு செய்துவிட்டு மீதியுள்ள நாள்களில் சொந்த விடுப்பில் கழிப்பது, இல்லையென்றால் சம்பளத்தை குறைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட சிலரை பணிக்கு வரும்படி உத்தரவிட்டுள்ள நிலையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைத்து பணிமனைகளிலும் சீருடை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க... சென்னை போக்குவரத்து பணியாளர்கள் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details