தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகர போக்குவரத்து கழகத்துக்கு புதிய இயக்குநர் நியமனம்! - Director of the Transport Corporation involves cheating

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்ட நிலையில், புதிய மேலாண் இயக்குநராக இளங்கோவனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

பேருந்து
பேருந்து

By

Published : Nov 19, 2020, 9:14 AM IST

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) இயக்குநராக பணியாற்றி வந்த கணேசன் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி 1.62 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் நவம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த கு.இளங்கோவனை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக (முழு கூடுதல் பொறுப்பு) நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர், நேற்று (நவ.18) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க:லஷ்மி விலாஸ் வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்தால் பயப்படாதீங்க..!

ABOUT THE AUTHOR

...view details