'டை சென்னை' அமைப்பும் குளோபல் தொழில்முனைவோர் அமைப்பும் இணைந்து சிறு குறு தொழில்முனைவோரின் சவால் குறித்த ஆய்வை நடத்தியது. தற்போது, இந்த ஆய்வறிக்கையை சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தில் 'டை சென்னை' அமைப்பின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிறுவனங்கள் சுமார் ஐந்து நபர்களுக்கு பணி வழங்கிவருகின்றன. சிறு குறு தொழில் நிறுவனம் சராசரியாக 13 ஆண்டு செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்காற்றிவருகின்றன. நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் வரவு செலவுகளைப் பராமரிப்பது மிகக் குறைவாக உள்ளது.