சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவிலிருந்த போது, மக்களில் உயிர் காக்க, முன்னதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு எழுதி தகுதிப் பெற்றிருந்த 2300 செவிலியர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் மூலம் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் கரோனா தொற்று பணிக்காகத் தேர்வுச் செய்யப்பட்ட செவிலியர்களை 2022 டிசம்பர் 31ம் தேதியுடன் பணியிலிருந்து விடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களைத் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் மூலம் மாவட்ட மருத்துவச் சேவையின் கீழ் மாதம் 18 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிகமாக நியமனம் செய்வதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்தது.