தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் போராடிய எம்ஆர்பி செவிலியர்கள் கைது.. அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு - Chennai News in Tamil

MRB Nurses Protest in Chennai:சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 6:28 PM IST

எம்ஆர்பி செவிலியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

சென்னை: திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு அதிகாலையில் வந்தவர்களை காவல்துறை அனுமதிக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலைமறியல் செய்தனர். இதனைத்தொடர்ந்து, எம்ஆர்பி செவிலியர்கள் வளாகத்திற்குள் செல்வதற்கு காவல்துறையினர் வாயில் கதவுகளை திறந்து விட்டனர். எம்ஆர்பி செவிலியர்கள் தங்களின் போராட்டத்தை தொடங்கினர்.

இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் செவிலியர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்களை திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அப்போது அவர்கள் தாெடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, கைது செய்த செவிலியர்களை DMS வளாகத்தில் கொண்டுச் சேர்க்கும் வரையில், எந்த செவிலியர்களும் உணவு உண்பதில்லை என முடிவு செய்த செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • 'எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில், இவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 356-ல் குறிப்பிட்டது போல், 'MRB செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்'
  • நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, NMC மற்றும் IPHS பரிந்துரைகளின் அடிப்படையில், நிரந்தர பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்
  • 11 புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்
  • பொது சுகாதாரத்துறையில் பணி செய்யும் Mentor Staff Nurse பணியிடங்களை சரண் செய்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதை கைவிட வேண்டும்
  • கரோனா கால கட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்
  • காலமுறை ஊதியத்தில் ஈர்க்கப்பட்ட செவிலியர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்
  • உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18,000 கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்
  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணிநேரத்தை உறுதி செய்ய வேண்டும்
  • ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்
  • செவிலியர்களுக்கு தொடர்பில்லாத Online Report-களை திணிப்பதை கைவிட்டு, தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முறையாக பணியிட மாற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:எம்ஆர்பி செவிலியர்கள் கைது விவகாரம்; போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள், செவிலியர்கள் சங்கங்கள்!

ABOUT THE AUTHOR

...view details