தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருவதற்கு சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்’ - டி.ஆர்.பாலு! - supreme court order on rahul gandhi issue

தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, எம்பி பதவியில் இருந்து நீக்கும் போது சபாநாயகர் எப்படி விரைந்து செயல்பட்டாரோ அதைபோல் தற்போதும் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மைய திறப்பு விழாவில் பேசிய டிஆர்.பாலு
தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மைய திறப்பு விழாவில் பேசிய டிஆர்.பாலு

By

Published : Aug 6, 2023, 11:03 PM IST

தாம்பரத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மைய திறப்பு விழாவில் பேசிய டிஆர்.பாலு

சென்னை:உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருவதற்கு சபாநாயகர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்றும் எம்பி பதவியில் இருந்து நீக்கும் போது எப்படி விரைந்து செயல்பட்டாரோ அதைபோல் தற்போதும் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என தாம்பரத்தில் நடைபெற்ற குடிநீர் சுத்திகரிப்பு மையங்களின் திறப்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலதிற்கு உட்பட்ட 3 இடங்களில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் நிறைவடைந்தது. அதனையடுத்து ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் புதிததாக புணரமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

அதனையடுத்து புதியதாக கட்டப்பட்ட 3 ஆவது மண்டல அலுவலக கூடுதல் கட்டடத்தையும் திறந்து வைத்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தையும் டி.ஆர்.பாலு பார்வையிட்டார். பின்னர் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனாவிடம் விவரங்களை கேட்டு அறிந்தார்.

இதையும் படிங்க:‘நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்கிறது’ - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புகழாரம்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க, தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பங்களை பெறும் முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற வர, சபாநாயகர் விரைவாக நடவடிக்கை எடுப்பார்.

மேலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறேன். அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு, எவ்வளவு விரைந்து பதவி நீக்கம் செய்தாரோ, அதுபோல் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வர விரைந்து நடவடிக்கை எடுபார். இந்தியா கூட்டணிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 31 ஆம் தேதி மும்பை செல்வார். மேலும் இதன் மூலம் தேசிய அளவில் எதிர் கட்சிகள் ஒன்றாக இணையும்.

பயணிகள் தேவைக்கு தாம்பரம் ரயில் முனையத்தில் எல்லா விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். தேஜாஸ் ரெயிலும், வந்தே பாரத் ரெயில் எதுவாக இருந்தாலும் ஒரு நிமிடம் நிற்பதால் மக்களுக்கு நன்மை தான்" என்ற ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்சியில் மண்டல குழு தலைவர்களான ஜெயபிரதீப் சந்திரன், காமராஜ், இந்திரன், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:‘எதிர்கட்சிகள் எதையும் செய்தது இல்லை; மற்றவர்களையும் எதையும் செய்ய விடுவது இல்லை’- பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details