சென்னை விமான நிலையத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், பெங்களூரு செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசியல்வாதிகள், ஆட்சியில் உள்ளவர்கள் பாதுகாப்பு தராமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
காப்பாற்ற முயன்றால் பெண்களுக்கு எதிரான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். எம்ஜிஆருடன் ரஜினிகாந்தை ஒப்பிடுவது தவறு. எம்ஜிஆர், திமுகவில் இருந்தபோதும் தீவிர அரசியலில் இருந்தார். திமுகவில் பொருளாளராக இருந்தார். 1972ஆம் ஆண்டு அதிமுகவை ஆரம்பித்து முதலமைச்சராக இருந்தார். 1984ஆம் ஆண்டு இறுதியில் உடல் நலம் குன்றியது.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவே இல்லை. கரோனா தொற்று இல்லையென்றால் ரஜினி முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம். உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று சொன்ன பிறகு விமர்சனம் செய்துவது சரியல்ல. ரஜினிகாந்தின் உண்மையான ரசிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்பார்த்து இருக்கலாம்.
எம்ஜிஆருடன் ரஜினிகாந்தை ஒப்பிடுவது தவறு உண்மையாக ரஜினியை விரும்ப கூடிய குடும்பத்தினர், அரசியல் கட்சியில் உள்ள நண்பர்கள், ரசிகர்கள், மன்றத்தினர் பதவிக்கு வருவது முக்கியமா? உடல் நலத்துடன் வாழ்வது முக்கியமா?. ரஜினி சொன்னதை ஏற்றுக் கொண்டு உடல்நலத்துடன் இருக்க பிராத்தனை செய்ய வேண்டும். அவரை வற்புறுத்தி அழுத்தம் தர போராட்டம் செய்வது சரியல்ல" எனக் கூறினார்.
இதையும் படிங்க:'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் மனுதாரர்'- நீதிமன்றம் உத்தரவு