தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவனின் கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே! - தொல்.திருமாவளவன் நன்றி

சென்னை: சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவனின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சி செல்லும் சிறப்பு ரயில் சிதம்பரத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

thirumavalavan
thirumavalavan

By

Published : Jun 16, 2020, 4:35 PM IST

பொது ஊரடங்கால் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டதால், தமிழ்நாடு அரசு சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று (ஜூன் 16) செங்கல்பட்டிலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் ரயில் தற்போது சிதம்பரத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06795/06796 செங்கல்பட்டிலிருந்து திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளியிலிருந்து செங்கல்பட்டு என சிறப்பு ரயில் இயங்குகிறது. கடந்த 14ஆம் தேதி வரையிலும் சிதம்பரத்தில் நின்று செல்லாது என அறிவித்த தெற்கு ரயில்வே நேற்று (ஜூன் 15) தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், சிதம்பரத்தில் நின்று செல்லும் என புதிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, செங்கல்பட்டில் நண்பகல் மூன்று மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9:30 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். மீண்டும் திருச்சிராப்பள்ளியில் காலை ஆறு மணிக்குப் புறப்படும் ரயிலானது நண்பகல் 12:45 மணியளவில் செங்கல்பட்டு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருமாவளவன் ட்வீட்

இந்நிலையில், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தென்னக ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், "திருச்சி செல்லும் சிறப்பு ரயில் சிதம்பரத்திலும் நின்று செல்ல வேண்டுமென தென்னக ரயில்வே அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தேன். அதனை நிறைவேற்றிய தலைமை இயக்க மேலாளருக்கு (Chief operative manager) எனது நெஞ்சார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னை - செங்கல்பட்டு - திருச்சி இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details