தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈழ விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக கட்சிக்கு வேறுபாடு இல்லை - திருமாவளவன் - vck on rajiv gandhi assassination case

எழுவர் விடுதலையை மீண்டும் நிராகரித்த ஆளுநர் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்; ஈழ தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ்-பாஜக கட்சிகளுக்கு ஒரே நிலைபாடு தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

thiruma
திருமாவளவன்

By

Published : Feb 4, 2021, 10:41 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவு என்னவாக இருக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தமிழ்நாடு ஆளுநர் விரைவில் நல்ல முடிவாக எடுப்பார் என அதிமுக அமைச்சர்களும் கூறி வந்தனர்.

இந்நிலையில், எழுவர் விடுதலையில் குடியரசு தலைவரே முடிவு எடுப்பார் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நம்மிடம் தொலைப்பேசி வாயிலாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “ஆளுநர் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக வேறுப்பட்ட ஒன்று இல்லை. குறிப்பாக தமிழர்கள் மற்றும் ஈழ தமிழர்கள் விவகாரத்தில் அதைக் கூறலாம். ஆட்சி மாறினாலும், அரசு ஒரே நிலைபாடு.

பாஜக ஆட்சி அமைத்தால் ஈழ தமிழர்கள் சிக்கல் தீரும் என சிலர் தோற்றத்தை உருவாக்கினர். அது உண்மை இல்லை என்பது இந்த முடிவில் தெரிகின்றது, இது வேதனை அளிக்கின்றது. ஆளுநர் மீண்டும் குடியரசு தலைவர் தான் முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் தெளிவாக எழுவர் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுத்து கொள்ளலாம் என வழிகாட்டியும் இவ்வாறு தெரிவித்திருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது ஆகும். தமிழர்கள் பாஜக, அதிமுக கட்சிகளுக்கு வருகின்ற சட்டபேரவை தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.

இது தொடர்பாக பேசிய சிபிஎம் பாலகிருஷ்ணன், “தனக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதை தீர்மானிக்க ஆளுநருக்கு எதற்கு இரண்டு ஆண்டுகள். ஆளுநரின் பொறுப்பற்ற நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு தைரியமாக தன்னிச்சையாக முடிவெடுத்து விடுதலை அறிவிக்க வேண்டும்” என்றார்.

எழுவர் விடுதலையில் ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடை காட்டுவதாகத் தெரிவித்த சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், ’வேண்டுமேன்றே பழிவாங்கும் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும்; இது நயவஞ்சக செயல். தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:எழுவர் விடுதலையில் ஆளுநர் மௌனத்துக்கான காரணம் இதுதான்! - முன்னாள் சிபிஐ அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details