ஆளுநர் ஆர்.என். ரவி வேறு விதத்தில் வலியுறுத்துகிறார் - சு.வெங்கடேசன் எம்பி சென்னைவிமான நிலையத்தில் சு.வெங்கடேசன் எம்பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது, ஆளுநர் மாளிகையின் விளக்க அறிக்கையை படித்து பார்த்ததில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை வேறு வகையில் வலியுறுத்துகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.
அந்த காலத்தில் தமிழ்நாடு இல்லை என்று சொல்கிறார். இந்த முடிவுக்கு எங்கு இருந்து வருகிறார் என்ற கேள்வி எழுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தமிழ்நாடு இருக்கிறது என்பதை வரலாறு காலம் எழுதப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. இதை ஏன் மறுக்க வேண்டும். இதனை மறுப்பதன் மூலம் அவர் வலியுறுத்தி வந்ததை தான் விளக்க அறிக்கை முலம் வேறு விதத்தில் வலியுறுத்துகிறார்.
தமிழ்நாடு- காசிக்கும் உள்ள உறவை பற்றி சொல்லும் போது பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அவர் பேசியது மட்டுமல்ல. பொங்கல் விழாவிற்கு அனுப்பி அழைப்பிதழ் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தை, இலச்சினை இல்லை. திருவள்ளுவர் ஆண்டு முறையை கைவிட்டு அழைப்பிதழை ஆளுநர் மாளிகை தயார் செய்கிறது. தமிழ், மொழி, பண்பாடு, வரலாறு அனைத்தையும் கலங்கப்படுத்தகிற விவாதத்திற்கு உட்படுத்தகிற நிராகரிக்கிற அரசியல் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தான் ஆளுநர் பேசுவது இன்றைய அறிக்கையும் தவறுலான கண்னோட்டத்தில் மீண்டும் மீண்டும் கருத்தை வெளிப்படுத்துகிறார். ஆளுநர் மீது திமுக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் மனு தந்து உள்ளார்கள். தமிழ்நாட்டில் பல கட்சிகள் ஆளுநரை கண்டித்து உள்ளன. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு.! வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி