தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அண்ணாமலைக்கு விநாயகர் அருள்பாலிக்க வாய்ப்பு’ - எம்.பி சு.வெங்கடேசன் - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொருநை நதி நாகரிகம் பற்றிய முதலமைச்சரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைத்தால் விநாயகப் பெருமான் அருள்பாலிக்க வாய்ப்புள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு விநாயகர் அருள்பாளிக்க வாய்ப்பு
அண்ணாமலைக்கு விநாயகர் அருள்பாளிக்க வாய்ப்பு

By

Published : Sep 9, 2021, 8:36 PM IST

சென்னை:மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டையை முதலமைச்சருக்கு அனுப்புவதற்கு பதிலாக, பொருநை நதி நாகரிகம் பற்றிய முதலமைச்சரின் அறிக்கையை பிரதமருக்கு அனுப்பி வைத்தால், சங்கத் தமிழ் மூன்றும் தந்து விநாயகப் பெருமான் அருள்பாலிக்க வாய்ப்புள்ளது.

விதி 110இன் கீழ் சமர்பிக்கப்பட்ட அறிக்கை, இந்திய வரலாற்றின் விதிகளை மாற்றும் அறிக்கையாகும்.

புராணங்களை வரலாறு என பொய்யர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் வைகை, பொருநை என்று ஆற்றங்கரை தோறும் அறிவியல் துணையோடு உண்மையான வரலாறு மீட்டெடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை நிகழ்ச்சி நேரலை - முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details