தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராகுல் காந்தி வழக்கில் நீதிமன்றத்திலும், மக்கள் மனதிலும் வெற்றி கிடைக்கும் - கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அப்பொழுது நீதிமன்றத்திலும், மக்கள் மனதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

By

Published : Mar 26, 2023, 3:11 PM IST

Updated : Mar 26, 2023, 7:19 PM IST

சென்னை:காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவும், கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அப்பொழுது நீதிமன்றத்திலும், மக்கள் மனதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோடி குறித்து கருத்து தெரிவித்ததற்காக, ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறவழி போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார்த்தி சிதம்பரம், திருநாவுக்கரசு ஆகியார் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், "இன்று நாடாளுமன்ற அவை நடைபெற வில்லை என்றால் அதற்கு காரணம் ஆளும் கட்சி தான். எதிர்க்கட்சி தான் அமலில் ஈடுபடுவார்கள். ஆனால், ஆளும் கட்சி அமலில் ஈடுப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அமலியில் ஈடுபட்டு விவாதம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்வது மட்டுமே ஜனநாயகம் கிடையாது. ஹிட்லர் கூட வாக்கெடுப்பு முறையில் அதிபர் ஆனார். ரஷிய தலைவர் புடின் வாக்கெடுப்பு முறையில் அதிபர் ஆனார். அவர்கள் எல்லாம் சர்வாதிகாரிகள். வாக்களிப்பதால் மட்டுமே ஜனநாயகம் இருப்பதாக கருதக்கூடாது. ஜனநாயகம் என்பது சுதந்திரமாக நீதிமன்றங்கள் இயங்க வேண்டும். மீடியா சுதந்திரமாக இயங்க இயங்க அனுமதி வழங்க வேண்டும். இதை தான் ராகுல் காந்தி பேசி உள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.

இந்தியா பற்றி வெளிநாட்டில் பேச கூடாது என்று தெரிவிப்பது வினோதமாக ஆக உள்ளது. ராகுல் காந்தி சொல்வது போல இந்தியாவில் ஜனநாயகம் தேய்ந்து வருகிறது. ராகுல் காந்தி விமர்சித்த அந்த பெயர்களை சொன்னால் என் மீதும் வழக்கு போடுவார்கள். எனக்காக சத்தியாகிரகம் பண்ண யாருமே வர மாட்டீர்கள். மோடி என்பது சமுதாய பெயர் என்பது எனக்கு தெரியாது. ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியது வழக்கு தொடர்ந்தவருக்கு புரிந்ததா என்பது கூட தெரியவில்லை.

5 நிமிடம் பேசியதற்காக 120 பக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்றம் குஜராத்தி மொழியில் தீர்ப்பு வழங்கி உள்ளது. பின்விளைவு வரவேண்டும் என்பதற்காக முன்விளைவு நடைபெற்று உள்ளது. அடுத்ததாக வக்கிர புத்தி உள்ள அரசு, ராகுல் காந்தி இல்லத்தை காலி செய்ய சொல்லுவார்கள். மேல்முறையீடுக்கு சென்று மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அவர் வருவார். அவர் நாடாளுமன்றத்தில் வெல்வார். மக்கள் மனதையும் வெல்வார்" என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "ஜனநாயகத்தின் விரோதமான செயல். பிரதான கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்று அவரது குரலை நிறுத்த வேண்டும் என்பதற்காக போலி வழக்கை போடப்பட்டுள்ளது. இதுபோன்று வழக்கு எங்கும் நடந்ததில்லை. மீண்டும் இதை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம், நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் மக்கள் மனதிலும் வெற்றி கிடைக்கும்.

ராகுல் காந்தி நடாளுமன்றத்துக்கு வரக்கூடாது, கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெருவில் வந்து போராடுவதே போராட்டம் என்ற எங்கள் கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதும் போராட்டம் தான். காங்கிரஸ் கட்சியில் எந்த கோஸ்டி மோதலும் இல்லை ஒற்றுமையாக ராகுல் காந்தி பின் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகப் போராட்டம் - டெல்லியில் தடையை மீறி போராட்டம்

Last Updated : Mar 26, 2023, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details