தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களின் திருமண வயது உயர்விற்கு கனிமொழி வரவேற்பு! - PM Modi announcement of minimum women's marriage age

சென்னை: பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்த, பரிந்துரைத்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஆகஸ்ட் 15) அறிவித்ததற்கு, கனிமொழி எம்.பி., வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Kanimozhi Tweet Women Marriage Age
Kanimozhi Tweet Women Marriage Age

By

Published : Aug 16, 2020, 1:46 PM IST

சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15) செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இவ்விவகாரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, 'பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்த நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!

ABOUT THE AUTHOR

...view details