தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் ஏழாயிரத்து ஆயிரத்து 276 பள்ளிகளிலிருந்து மூன்றாயிரத்து 12 தேர்வு மையங்களில் எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 பள்ளி மாணவ, மாணவிகளும், 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
'நாளைய உலகை கட்டமைக்கும் மாணவர்களே...!' - தெறிக்கவிடும் கனிமொழி - 12th exam
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொண்டு அதில் மாணவர்கள் வெற்றிபெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
mp-kanimozhi-twitter
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது ட்விட்டர் பதிவில், "பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள், நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!